மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்மநேரி அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் முருகன் என்பவர் தமிழாசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று முருகனிடம் தட்டி கேட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து சென்று முருகனை பிடித்து நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.