Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு பாதுகாப்பு….. துப்பாக்கியுடன் சென்ற நபர்…… எதுக்காக என்பதுதான் ஹைலைட்…..!!!

தெருநாய்களிடம் இருந்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி, மாணவிகளை மதரஸாவிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காசர்கோடு பேக்கலில் உள்ள ஹதாத் நகரில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மதரஸா பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தையான சமீர், சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தெருநாய் கடித்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தார்.

வெள்ளிக்கிழமை, அவர் தனது துப்பாக்கியை எடுத்து 13 குழந்தைகளை மதரஸாவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். மற்றொரு வீடியோவில், நாய்கள் குழந்தைகளைத் தாக்கினால் சுடத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் துப்பாக்கியைப் பயன்படுத்தி குழந்தைகளுடன் செல்ல முடிவு செய்ததாக அவர் கூறினார்.

Categories

Tech |