திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எம்.ஏ., படிக்கும், ஐந்து மாணவியர், கடந்த மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் புகார் அளித்தனர். அதில், தமிழ்த் துறை தலைவராக பணியாற்றி வரும் பால் சந்திரமோகன், 54, வகுப்பில் ஆபாசமாக நடப்பதுடன், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி, ஆபாசமாக பேசுவதாக தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து பால் சந்திரமோகன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
மாணவியரின் புகார் குறித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, திருச்சி மாநகர கூடுதல் துணை கமிஷனர் லலிதா தலைமையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிமுனிஷா தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பேராசிரியர் பால் சந்திரமோகனை ஸ்ரீரங்கம் மகளி்ர் போலீசார் இன்று கைது செய்தனர்.