Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு……!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனர் என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பாக உறுதி செய்ய வேண்டும்.

  • இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ள மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றுள்ளார்களாக மேலும் தேர்ச்சி பெற்றது குறித்து பள்ளிக் கல்வித்துறை சரிபார்க்க வேண்டும்.

மேலும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்காக 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் வருடத்திற்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |