உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
இந்தத் திட்டத்திற்கு பல மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் 1000 உதவித்தொகையை கூட்டுறவு வங்கி வாயிலாக வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் வேளாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு மாணவியர்களுக்கு எந்த வகையில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படும்.