Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. எப்படி விண்ணப்பிப்பது?… தகுதிகள் என்னென்ன?…. இதோ முழு விவரம்…..!!!!

மிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவிகளிடம் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது பற்றி இதில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் உயர் கல்விக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம் தகுதியுள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 6-12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆதார் கார்டு, வங்கி கணக்கு, 10,12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் தேவை. மேலும் மாணவிகள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதால் விருப்பமுள்ள மாணவிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |