Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. எப்போது தெரியுமா….? அமைச்சர் குட் நியூஸ்….!!!!!

அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும்.  இந்நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ள்ளது.

இந்நிலையில் மாணவிகளுக்கு ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் ஜூலை 15ல் தொடங்கி வைப்பார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த திட்டம் போய் சேர்ந்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலை நாங்கள் தயார் செய்து வருகிறோம். விரைவில் பட்டியல் முடிவு செய்யப்பட்ட ஜூலை மாதத்தில் இது தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |