தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதையடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது.
அதாவது ஜூலை 10-ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் அதற்கு தகுதியான மாணவிகள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.