Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. இன்றே(ஜூலை 18) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதை எடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஜூலை 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பலன் பெற தகுதியான மாணவிகள் இன்றுக்குள் (ஜூலை 18) www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |