Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 7 ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக 698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |