தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டமாக உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தில் மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் சேராமல் விடுபட்ட மாணவர்கள் குறித்து ஆலோசனை ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டது.
அப்போது, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவர்கள் தங்களின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு என்னுடன் செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளது உறுதி செய்ய வேண்டும். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,பாரத ஜனதா வங்கி மற்றும் கனரா வங்கிகளில் மட்டுமே மாணவர்கள் கணக்கு வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் மாணவிகள் யாரும் விடுபடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.