அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் மாணவியரின் விவரங்களை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற இத் திட்டத்தை, இந்த கல்வியாண்டு முதல் தொடங்குவதற்கான பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது. ஜூலை 15ம் தேதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.