ஆந்திரா மாநிலத்தில் சரிதா தலூரு(21) என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேர வேலையை சமூக வலைதளங்களில் தேடி வந்தார். அப்போது ஆன்லைன் மூலம் தாவு நிதிஷ் ரெட்டி என்பவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1லட்சம் வாங்கி உள்ளார்.
ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகுதான் நிதிஸ் ரெட்டியிடம் போன் செய்து கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரிதா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனையடுத்து இவர் மயிலாப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்து மோசடி செய்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.