Categories
தேசிய செய்திகள்

மாணவிகளே! உஷார்…. விடுதியில் குளிப்பதை வீடியோ எடுத்த ஆசாமி….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் துல்சி நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் ஒரு விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியை காவல் துறையில் கூடுதல் பதவியில் இருக்கும் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு மாணவி குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.  இதைப்பார்த்த சக மாணவி ஒருவர் துப்புரவு தொழிலாளியை மடக்கி பிடித்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளார்.

அந்த செல்போனை பார்த்த போது அதில் ஏராளமான பெண்களின் குளியல் வீடியோ உட்பட பல்வேறு விதமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை பார்த்து மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த விவரத்தை மாணவி விடுதி காப்பாளரிடம் கூறினார். இதுகுறித்து விடுதி காப்பாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்புரவு தொழிலாளியை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |