தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் அளிக்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு தேவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கோவை மாணவி தற்கொலை வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகம் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை.தமிழகத்தில் கல்வி கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் மாணவிகளுக்கு பள்ளிகளில் பாலியல் தொல்லை இருந்தால் 14417 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறிய அமைச்சர், உதவி எண்ணை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.