மாணவிகள் நடத்தும் ஹிஜாப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது கட்சி செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவிகள் நடத்தும் ஹிஜாப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பிஉள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.