Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிகள் அளித்த புகார்…. தலைமை ஆசிரியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. மேலும் அவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |