நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை வசதி கட்டாயம். இதனை நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.
Categories