Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவிகள் பாலியல் வழக்கு…. ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நீதிமன்றத்த்தில் சரணடைந்த நிலையில் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன்பாபு மற்றும் சமூகவியல் ஆசிரியர் ராமராஜன் ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ராமராஜனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவான ஆல்பர்ட் வளவன்பாபுவை தேடி வந்த நிலையில் அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சுபத்ரா முன்னிலையில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்த்து வலக்கை விசாரித்த நீதிபதி ஆல்பர்ட் வளவன் பாபுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் ஆல்பர்ட் வளவன் பாபுவை பரமக்குடி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |