Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு ஆபாசப்படம்…. ஆசிரியரின் வெறிச் செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

புதுச்சேரியில் தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியர் டோனி வளவன் பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தனது மொபைலுக்கு ஆபாச படம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தன் பெற்றோரிடம் முறையிட பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியின் முன் திரண்ட மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து அந்த ஆசிரியரிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |