மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிலேயே சமோசா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மோகனுக்கும், 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மாணவி கர்ப்பமானதை அறிந்து அவரது பெற்றோர் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.