Categories
மாநில செய்திகள்

மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்…. காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி விரிவுரையாளரை அம்மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த காலவாக்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் Ph.d  படித்து வருகிறார். இதற்கு முன்பு எஸ்ஆர்எம் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அக்கல்லூரியின் விரிவுரையாளர் செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் திருமணம் செய்யாமல் அம்மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பிறகு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமான பிறகும் மாணவியுடன் உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். அந்த மாணவி கல்லூரியில் பயின்ற அருள் பாண்டியன் என்பவன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, செந்திலிடம் இருந்து விலகி சென்றுள்ளார்.

ஆனால் செந்தில் தொடர்ந்து அந்த மாணவியை தன்னுடன் பழகும் படி வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி தனது நண்பருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து மகாபலிபுரம் சாலை வரச் சொல்லியுள்ளார். அவர் அங்கு வந்த போது அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து செந்திலை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மடக்கிப்பிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |