Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11- ஆம் வகுப்பு மாணவர்….. பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் பள்ளியில் 11- ஆம் வகுப்பு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் மற்றொரு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் முடிந்து மாணவி வெளியே வந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மாணவர் சிறுமிக்கு தாலி கட்ட முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டவாறு ஓடியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனால் அச்சத்தில் அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த மாணவரின் அடையாளம் தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மாணவரையும், அவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |