Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. என்ஜினீயர் போக்சோவில் கைது….!!

மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குசாலை அருகே உள்ள வேட்டமங்கலம் பகுதியில் ராமசந்திரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரான இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிக்கு அடிக்கடி போன் செய்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி மாணவிக்கு தொல்லை கொடுத்த ராமசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |