மாணவிக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும், 31 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவெடுத்தனர். அதன்படி இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் இரு வீட்டாரையும் எச்சரித்து மாணவியை மீட்டு நாகர்கோவிலில் இருக்கும் அரசு காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.