11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலுள்ள தளவாய்புரம் வணமூர்த்திலிங்கம் பிள்ளை தெருவில் 22 வயதான ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.