Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளவாய்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்காக காவல்துறையினர் கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்ணன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையிலிருக்கும் கண்ணனுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |