மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமையாசிரியரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் எமன் குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திசையன்விளையில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது கிறிஸ்டோபர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு கிறிஸ்டோபர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தலைமை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தப்பி ஓடிய ஜெபகுமாரை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் கன்னியாகுமரி மற்றும் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.