மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் கிறிஸ்டோபர் அந்த மாணவியின் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கிறிஸ்டோபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து கேரளாவில் பதுங்கி இருந்த கிறிஸ்டோபரை தனிப்படை காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன்பின் தலைமையாசிரியரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.