Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் பணியிடை நீக்கம்…. வெளியான உத்தரவு….!!!

பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் காவல்துறையினர் கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பேராசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திரவிட பட்டது. இதன் காரணமாக பேராசிரியர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் நேற்று இரவு கோபியை சஸ்பெண்ட்  செய்வதாக உத்தரவிட்டார்.

Categories

Tech |