Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு லவ் டார்ச்சர்….. கதற வைத்த கிராம மக்கள் …. திரும்பி பார்க்காமல் ஓடிய ஆசிரியர்…. சூப்பர் பாடம் …!!!!

பீகாரில் மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த டியூசன் ஆசிரியரை கிராம மக்கள் தோப்புக்கரணம் போட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் டியூசனுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் டியூசன் சென்ற மாணவியை காதலிக்க சொல்லி டியூசன்  ஆசிரியர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.. மாணவி மறுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்த நிலையில், பொறுமையை இழந்த மாணவி பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பிறகு மாணவியின் பெற்றோர் கிராம மக்களுடன் இணைந்து இது தொடர்பாக ஆசிரியரிடம் கேட்டு உள்ளனர். ஆனால், ஆசிரியர் மழுப்பலாக பதில் கூறிய நிலையில், ஆசிரியரை தோப்புக்கரணம் போட வைத்து பாடம் புகட்டியுள்ளனர்.

Categories

Tech |