அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கம் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அறிவித்துள்ளார். அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி தாளாளர் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சார்ந்த M.தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கட்சி பொறுப்பில் சரியாக செயல்படாத காரணத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். நேற்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக அறியப்பட்ட செய்தியின் அடிப்படையில் அவரை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.