Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றப்படுமா?…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாணவி மனு ஒன்றை அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அல்ஸலாம்பேகம் என்ற பெண் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் நான் பி.எஸ்.சி. நர்சிங் படிக்க விண்ணப்பித்தேன். எனக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் தஞ்சையிலுள்ள அவர் லேடி நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அதற்கான ஆணையும் கடந்த 10-ஆம் தேதி எனக்கு கிடைத்தது. இந்நிலையில்  கடந்த 11-ஆம் தேதி நான் அந்த கல்லூரியில் சேர்வதற்கு சென்றேன். அப்போது கல்லூரி நிர்வாகம் மறுநாள் வருமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அரசு ஒதுக்கீட்டில் இடம் இல்லை எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருங்கள் அதற்காக 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனையடுத்து  நிர்வாக ஒதுக்கீட்டிலும் இந்த ஆண்டு இடமில்லை எனவே அடுத்த ஆண்டு சேருங்கள் என திருப்பி அனுப்பினர்.

மேலும் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த முதல் பட்டதாரியாக நான்  கிராமத்தில் இருந்து தற்போது தான் தமிழக அரசின் உத்தரவின் கீழ்  முதல் பட்டதாரியாக பி.எஸ்.சி .நர்சிங் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த கல்லூரி எனக்கு அந்த வாய்ப்பை கொடுக்க மறுத்துவிட்டது. எனவே அந்த கல்லூரியிலோ அல்லது வேறு ஒரு கல்லூரியில் இடம் வாங்கி  தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மாணவி மனுவில் கூறியுள்ளார்.

Categories

Tech |