இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மன்குட்டை கிராமத்தில் விவசாயியான ராமையன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவிக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி ராமையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காச நோயால் அவதிப்பட்ட ராமையனுக்கு உடல் நலம் மிகவும் மோசமானது. இதனால் ராமையன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.