உடல்நலக்குறைவால் அவதியடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கள்ளர் கிழக்கு தெருவில் பரதன் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது 2-வது மகள் சுபஸ்ரீ 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபஸ்ரீ கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியான சுபஸ்ரீயை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுபஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கூடலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.