மாணவியுடன் குடும்பம் நடத்திய தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சிபட்டுவிலை பகுதியில் ரோஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலைக்காக தென்காசி மாவட்டம் வி.கே புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 10-ம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோஜேஷ் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவியை கண்டித்து வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என கூறியுள்ளனர்.
இதனையடுத்து ரோஜேஷ் மாணவியை வடக்கூருக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளார். இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என வி.கே புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் மாணவி ஆரல்வாய்மொழி வடக்கூரில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் சில நாட்களிலேயே ரோஜோஷ் மீண்டும் மாணவியை அழைத்து சென்று தெற்ககூரில் குடும்பம் நடத்தியுள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை ரோஜேஷ் கடத்தி சென்று விட்டதாக நாகர்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரோஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு மாணவியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.