மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவி விடுமுறை நாட்களில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் மாணவிக்கு நஷ்டம் ஏற்படவே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிக்கு பண உதவி செய்துள்ளார். இதன் மூலம் மாணவிக்கும், சஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் கல்லூரி மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்துள்ளார். அதை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஆபாச படங்களை சஜித் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆபாச படங்களை வைத்து சஜித்தின் நண்பர்களும் மாணவியை மிரட்டி உள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவி மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி சஜித் (ராணுவ வீரர்), க்ரிஷ் (ராணுவ வீரர்), ஜான் பிரிட்டோ, விபின் ஜான் ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய விபின் ஜான் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 2 ராணுவ வீரர்களையும் தேடி வந்த நிலையில் சஜித்தை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கிரிஷை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.