Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவியை கடத்த முயற்சி…. அதிரடியாக மடக்கிய தந்தை…. 4 வாலிபர் கைது….!!

12ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவதன்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த மாணவியை சிலர் திடீரென காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை உடனடியாக அந்த காரை மடக்கி பிடித்துள்ளார்.

இதனையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் இருந்தவர்கள் கீழமதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வசித்தும் சதீஷ்(22), மணிபாரதி(22), பிரபு(22), அஜித்குமார்(22) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |