திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்லப்பன் பட்டி கிராமத்தில் டிராக்டர் டிரைவராக மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். மேலும் மணி அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி மாதனூர் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த மணி குருராஜபாளையம் வந்ததும் மாணவியை கீழே இறங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் மணி மாணவியை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணியை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால் அச்சத்தில் மணி தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அப்பகுதியில் இருக்கும் பள்ளியின் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.