தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகரில் 14 வயது சிறுமியை தன் வீட்டுக்கு வரச் சொன்ன பூசாரி தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.ஆனால் அந்த மாணவி, பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பூசாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் கூறினாள்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், பூசாரி சந்திரசேகரை சரமாரியாக அடித்து உதைத்தனர். சிறுமியின் பெற்றோர் பூசாரிக்கு தர்ம அடி கொடுக்க அதில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி தற்போது தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பூசாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.