10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உதரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்டயம் பட்டிகிராமத்தில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனதயாளன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தீனதயாளன் கடந்த 2018-ஆம் ஆண்டு மனையேறிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவி பள்ளிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தீனதயாளன் அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீனதயாளனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீனதயாளனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 70 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த மாணவிக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.