கோவையில் சூழல்லூர் பீடம்பள்ளியில் சுபாஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் ஆவார். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் கலந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த மாணவியின் வீட்டிற்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்தார். அதன் பிறகு வீட்டில் தனியாக இந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனை தொடர்ந்து 2 மாதங்களுக்கு மீண்டும் அந்தமாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சா கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சுபாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.