Categories
தேசிய செய்திகள்

மாணவி கேட்ட சிம்பிளான கேள்வி….. அநாகரிகமாக பேசிய அதிகாரி…. அப்படி என்ன நடந்தது தெரியுமா……?????

பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பள்ளி மாணவி ஒருவர் கேட்ட எளிய கேள்விக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது திடீரென ஒரு பள்ளி மாணவி எழுந்து குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என மாணவி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவர் ஆன ஹர் ஜோத் கவுர் பாம்ரா , கூட்டத்தில் பங்கேற்ற சிறுமிகள் மத்தியில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் முகம் சுழிக்க வைக்கும் வகையில் பேசினார். அந்தச் செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

‘நாளை அரசாங்கம் ஜீன்ஸ் பேண்டும் தரலாம் என்று சொல்வீர்கள். அதற்குப் பிறகு, ஏன் சில அழகான ஷூக்கள் தரக்கூடாது? என்பீர்கள். கடைசியில் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் ஆணுறைகள் ஆகியவற்றைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்’ என அவர்  கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |