மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். பின் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாணவி சத்யபிரியாவை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சிபிசிஐடி காவல்துறை அளித்த பரிந்துரையை அடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்..