இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசியலை கையில் எடுத்துள்ளதாக பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது கே.எஸ் அழகிரி, பாஜக அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் அந்த மாணவியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாய மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது பாஜகவினர் மாணவியின் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் பாஜகவினர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பில் உண்ணாவிரதம் இருப்பது அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.