தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும்.
மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அரியலூர் பிளஸ்-2 மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
இந்நிலையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி மேல்முறையீடு செய்து இருக்கிறது. வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (பிப்…3) மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.