Categories
அரசியல்

மாணவி தற்கொலை விவகாரம்!…. உடனே இதை பண்ணுங்க…. அண்ணாமலை கோரிக்கை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு நிதி உதவியாக ரூ.10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாங்கள் நடத்துவது மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இது மதத்திற்கான போராட்டம் அல்ல. மாணவியின் வீடியோ வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பாஜக உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |