Categories
தேசிய செய்திகள்

மாணவி தற்கொலை விவகாரம்…. சிபிஐ விசாரிக்க தடை இல்லை…!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!

அரியலூர் மாவட்டம் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை போட முடியாது என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி மற்றும் மகள் லாவண்யா (வயது17). இதனைத் தொடர்ந்து லாவண்யா தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த லாவண்யா கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து  சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். அதில் “அவர் பள்ளி நிர்வாகமும் விடுதி காப்பாளர்கள் தன்னை மதமாற்றம் செய்வதற்கு கட்டாயப்படுத்தியதால்  தான் நான் விஷம்  குடித்தேன் என்று கூறியிருந்தார்”. அந்த வீடியோ விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மற்றொரு வீடியோவில் “குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பள்ளி விடுதி காப்பாளர்கள் தன்னை அதிக வேலை வணங்குவதாகவும் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் மதிப்பெண் குறைவானதால் தான் நான் விஷம் குடித்ததாக” மாணவி லாவண்யா கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் மனு தாக்கல் செய்து விசாரணை நடத்தியபோது லாவண்யா இறந்ததற்கு மதம் சார்பான பிரச்சினைகள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செயல்படவில்லை என்றும் லாவண்யா இறப்பிற்கு இது காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மகளின் மரணம் குறித்து சிபிசிஐடிக்கு விசாரணையை மாற்றியமைக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, மாணவியின் தற்கொலை வழக்கு கடந்த 11ஆம் தேதி சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கு தடை விதிப்பதற்கு மற்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துக்களை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது சிபிசிஐடிக்கு மாற்றுவது முறையல்ல இந்த வழக்கை அவர்கள் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவித்தனர். இந்த வாதத்தை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்  ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை நீக்குவது தொடர்பான மனுவை விசாரிக்கிறோம் ஆனால் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தடை விதிக்க முடியாது மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ள கருத்துகளை நீக்குவது தொடர்பான எதிர்ப்பு மனுதாரரான லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான வழக்கு 4 வாரங்கள் பிறகு மீண்டும் நடைபெறும் என உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

Categories

Tech |