Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பிய மாணவி…. பலாத்காரம் செய்த டிரைவர்…. வலை வீசி தேடும் போலீசார்..!!

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள விட்டம்பாளையம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவராக பணிபுரியும் சத்திய மூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த பிளஸ் -2 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி மாணவியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதுப்பற்றி மாணவி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆட்டோ டிரைவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த  புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |