மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் வசித்து வருபவர் 35 வயதுடைய பாலாஜி. இவர் நெல்லிக்குப்பத்தில் இருக்கின்ற சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டியில் இருக்கின்ற ஒரு கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நெல்லிக்குப்பத்தில் வசித்த 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.